சனி, 29 மே, 2010

தெளிந்த மனசு

சிறுபாக்கம் கிராமம் ,நான் மருத்துவத்தொழில் பார்த்து வந்த காலம் .வழக்கம் போல் காலையில் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன் .நடுத்தர வயதுள்ள நபர், தன்னுடைய பெண் குழந்தையை
காட்டுவதற்காக அழைத்து வந்திருந்தார் .நான் அந்த பெண்ணை பார்த்தபடியே " என்ன செய்கிறது" என்றேன் .
"இரண்டு நாட்களாக , சளி மூக்கில் தண்ணீராக ஒழுகியது . சரியாக போய்விடும் என்று நினைத்தேன் .இன்று
சுரமும் சேர்ந்துக்கொண்டது ,அதான் அழைத்து வந்துவிட்டேன் .என்றார் .
சிறு போவையால் போத்தப்பட்டு , லேசான உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட அந்த ஒன்பதுவயது பெண்
என்னை அச்சத்தோடு பார்த்தது .அதனுடைய பயத்தை போக்கும் விதமாக அருகில் அழைத்து தலையை ஆதரவுடன் தடவி விட்டபடியே " பயப்படாதேம்மா, ஊசி போடமாட்டேன்" . என்றேன் .முகத்தில் அச்சம் நீங்கி,
மலங்க மலங்க பார்த்தது . உதடுகள் உலர்ந்துபோய் முகம் சிவந்து காணப்பட்டது . உள்ளம் இரக்கத்தால்
நெகில்வடைன்ததுஅந்த பெண்ணை கவனமுடன் பரிசோதித்து பார்த்து , நோயுயிர் முறி மருந்தினையும் ,சளி ,ஜுரத்துக்கான மருந்தினையும் ,ஆறு வேலை சாப்பிட ச்சொல்லி பரிந்துரைத்தேன் .பரிந்துரை சீட்டை பெற்றுக்கொண்ட அவர் ,இருபது ருபாய் பீசை எடுத்து நீட்டினார்.பெற்றுக்கொண்ட நான் அவர் தயங்கி நிற்ப்பதை பார்த்து "என்னங்க ,வேறு ஏதாவது சொல்லனுமா ?" என்றேன் .
"தப்பா நினைத்து கொள்ளாதீர்கள். ஊசி ஏதும் போடலியே ,ஜுரம் விட்டு விடுமா ?"என்றார் .
கவலையுடன் பேசிய அவரின் சந்தேகத்தை போக்கும் விதமாக 'இது சாதாரண ஜுரம்தான். மாததிரை, மருந்துகளிலே சரியாகிவிடும். மேலும், வாய் வழியே மாததிரை சாப்பிடமுடியாத நேரங்களில்தான் ஊசி போட வேண்டும். ஊசி போட்டால் தான் நோய் குணமாகும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள்."என்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

என்னைப் பற்றி

தேடல் வாழ்வை சுவாரசியப்படுத்துகிறது.அர்த்தப்படுத்துகிறது. தேடி பெற ஒன்றுமில்லாவிட்டாலும்......