புதன், 9 மார்ச், 2016

திங்கள், 10 ஜனவரி, 2011

பன்னீர் தயாரிப்பு ;மோசடி அம்பலம் .

நான் பன்னீர் தயாரிக்கும் கம்பனியில் இரண்டு ஆண்டு காலம் வேலை செய்தேன் .பன்னீர் எவ்வளவு மோசமாக தயாரிக்கப்படுகிறது .அங்கு நடக்கும் முறைகேடுகள் ,சுரண்டல்கள் ,மக்களின் ஆரோக்கியத்துடன் ,உயிருடன் ,அவர்கள்

சனி, 29 மே, 2010

தெளிந்த மனசு

சிறுபாக்கம் கிராமம் ,நான் மருத்துவத்தொழில் பார்த்து வந்த காலம் .வழக்கம் போல் காலையில் நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன் .நடுத்தர வயதுள்ள நபர், தன்னுடைய பெண் குழந்தையை
காட்டுவதற்காக அழைத்து வந்திருந்தார் .நான் அந்த பெண்ணை பார்த்தபடியே " என்ன செய்கிறது" என்றேன் .
"இரண்டு நாட்களாக , சளி மூக்கில் தண்ணீராக ஒழுகியது . சரியாக போய்விடும் என்று நினைத்தேன் .இன்று
சுரமும் சேர்ந்துக்கொண்டது ,அதான் அழைத்து வந்துவிட்டேன் .என்றார் .
சிறு போவையால் போத்தப்பட்டு , லேசான உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட அந்த ஒன்பதுவயது பெண்
என்னை அச்சத்தோடு பார்த்தது .அதனுடைய பயத்தை போக்கும் விதமாக அருகில் அழைத்து தலையை ஆதரவுடன் தடவி விட்டபடியே " பயப்படாதேம்மா, ஊசி போடமாட்டேன்" . என்றேன் .முகத்தில் அச்சம் நீங்கி,
மலங்க மலங்க பார்த்தது . உதடுகள் உலர்ந்துபோய் முகம் சிவந்து காணப்பட்டது . உள்ளம் இரக்கத்தால்
நெகில்வடைன்ததுஅந்த பெண்ணை கவனமுடன் பரிசோதித்து பார்த்து , நோயுயிர் முறி மருந்தினையும் ,சளி ,ஜுரத்துக்கான மருந்தினையும் ,ஆறு வேலை சாப்பிட ச்சொல்லி பரிந்துரைத்தேன் .பரிந்துரை சீட்டை பெற்றுக்கொண்ட அவர் ,இருபது ருபாய் பீசை எடுத்து நீட்டினார்.பெற்றுக்கொண்ட நான் அவர் தயங்கி நிற்ப்பதை பார்த்து "என்னங்க ,வேறு ஏதாவது சொல்லனுமா ?" என்றேன் .
"தப்பா நினைத்து கொள்ளாதீர்கள். ஊசி ஏதும் போடலியே ,ஜுரம் விட்டு விடுமா ?"என்றார் .
கவலையுடன் பேசிய அவரின் சந்தேகத்தை போக்கும் விதமாக 'இது சாதாரண ஜுரம்தான். மாததிரை, மருந்துகளிலே சரியாகிவிடும். மேலும், வாய் வழியே மாததிரை சாப்பிடமுடியாத நேரங்களில்தான் ஊசி போட வேண்டும். ஊசி போட்டால் தான் நோய் குணமாகும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள்."என்றேன்.

வியாழன், 27 மே, 2010

ஏன் என்ற வினா

இங்கு தகுதிஇல்லாதவன் கையில் பணமும்,அதிகாரமும் விளையாடுகிறது.தகுதி உள்ளவன் த்ரித்திரவானாக இருக்கிறான் ஏன்?
ஒருபக்கம் செல்வம் படைத்தவர்கள்,மறுபக்கம் ஏழைகள்ஏன்?
ஒன்றாக படித்தவர்களில் ஒருவர் சிரமமின்றி அரசு வேலைபெறுகிறார்.
ஒருசிலர் தலைகிழாக நின்றாலும் வேலை கிடைப்பதில்லை.
நல்ல வசதி இருந்தும் சரி இல்லாத மனைவி, அடங்காத பிள்ளை .
வாங்கும் வசதி இருந்தும் அதை அனுபவிக்கமுடியாமல் நோய்களின் அணிவகுப்பு.
திருமணமே ஆகாமல் முதிர்கன்னி வாழ்க்கை சிலருக்கு, உடனடி திருமணமும் மழலை செல்வமும்தேடாமல் கிடைக்கிறதுசிலருக்கு.
பொருள்செல்வம் உள்ள இடத்தில் மக்கள் செல்வமில்லை.
மக்கள் செல்வமுள்ள இடத்தில் பொருளில்லை.
அறிவுபலம் உள்ள இடத்தில் உடல் பலமில்லை
உடல் பலமுள்ள இடத்தில் அறிவில் தெளிவில்லை.
ஒன்றாய் பிறந்த மனிதர்களிடையே என்
இந்த பாகுபாடு என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா?
வாழ்வை கணத்துக்கு கணம் விழிப்புடன் கவனித்து
பார்த்ததுண்டாஅறிவின்வழிசிந்தித்து விடைகானமுடியாமல்
திகைத்தது உண்டா?சமூகத்தின்மேல் கோபமும் சுயகழிவிரக்கமும்
அடைந்ததுண்டா? இதுபோன்ற விடைகான முடியாத கேள்விகளை
சுமந்து களைப்பு அடைந்து அறிவினால் காணமுடியா விடையை
அனுபவத்தால் அடைந்தவன்நான்.என்
அனுபவம் மூலம் சர்ச்சையை ஆரம்பிப்போமா......?

சனி, 22 மே, 2010

உறுதிமொழி

என் வாழ்வில் உண்மையை நெருக்கமாய் சந்தித்த தருணங்களை
உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.நான் மனப்பூர்வமாக உண்மையை
பேசினாலும்,அது என் அனுபவம் மட்டுமே.என் அனுபவம் நான் அறிந்த, சேமித்த
சாரம்அதிலிருந்து மானுடம் ஏதாவது பயன் பெருமானால் இந்த பதிவின் நோக்கம் நிறைவேறும்.

எழுத்தும் தெய்வம்.எழுதுகோல் தெய்வம்.

என்னைப் பற்றி

தேடல் வாழ்வை சுவாரசியப்படுத்துகிறது.அர்த்தப்படுத்துகிறது. தேடி பெற ஒன்றுமில்லாவிட்டாலும்......